புதிதாக கண்டறியப்பட்டுள்ள லாம்டா என்ற வகையினை சேர்ந்த கொரோனா இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகையை விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் அபாயத் தன்மை கொண்டது என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.
இங்கிலாந்தில் தற்போது ஆதிக்கம் செலுத்தி வரும் டெல்டா வகைகளை விட புதிதாக பரவிவரும் லாம்டா வகை கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. அந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.
தென்னமெரிக்க நாடான பெரு நாட்டில் இந்த வகையினதான உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முறையாக கண்டறியப்பட்டது. அந்த நாட்டில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரிழப்பு உலகிலேயே மிக அதிகம். தற்போது இங்கிலாந்திலும் லாம்டா வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை அந்த நாட்டில் பத்துக்கும் குறைவான நபர்களுக்கு இந்த வகை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
லாம்டா வகை கொரோனா அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதுடன், டெல்டா வகை கொரோனாவை விட அதிக வேகத்தில் பரவும் தன்மையும் கொண்டது கொண்டதாக இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
டொக்டர் கார்த்திகேயன்.
தொகுப்பு அனுஷா.