நாட்டின் பல பகுதிகளில் டெங்கு நோய்ப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பொதுவைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
வாரமொன்றில் 200 டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேல், வடமேல், சப்ரகமுவ மாகாணங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகுவதாக பொதுவைத்திய நிபுணர் ப்ரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18,000 பேர் வரையில் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.