கடந்த மாதம்டெங்கினால் பீடிக்கப்பட்ட 56 பேர் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.
பிரதேசத்தில் மழை பெய்யாத நிலையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து ஆலய திருவிழாக்க ளுக்கு வந்தவர்களை வரவேற்கவும் வழியனுப்பவும் தென்பகுதிக்கு அவர்களுடன் சுற்றுலா சென்றவர்களுமே டெங்கினால் பீடிக்கப்பட்டவர்களாக இனம்காணப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தென்பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக கட்டட நிர்மாணப் பணிக்குச் சென்றவர்களும் தென்பகுதியில் உயர்கல்வி கற்கும் மாணவர்களும் கடந்த மாதம் டெங்கினால் பீடிக்க்ப் பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 26 பேரும் ஜூலை மாதம் 66 பேரும் டெங்கினால் பீடி க்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.