2021 ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரையறுக்கப்பட்ட ஓவர் வடிவத்துக்கான தலைவர் பதவியில் இருந்து இலகுவார் என்று வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துள்ளது.
ஒக்டோபரில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமனில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. டி-20 உலகக் கிண்ணத்தை வெல்ல முடியாவிட்டால், கோலி தனது வெள்ளை பந்து கேப்டன்சியை இழக்கலாம்.
அதேநேரம் வரையறுக்கப்பட்ட ஓவர்களுக்காக அணியை வழிநடத்தும் பொறுப்பை ரோஹித் சர்மா ஏற்பார் என்று செய்திகள் முன்னதாக வெளியாகின.
எனினும் இந்த தகவல்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் பொருளாளர் அருண் துமால் திங்களன்று நிராகரித்ததுடன், விராட் கோலி அனைத்து வடிவ கிரிக்கெட்டுக்கும் தலைவராக செயற்படுவார் என்றும் அவர் உறுதிபடுத்தினார்.