2021 டி-20 உலகக் கிண்ணத்துக்கான ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஜிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவர் ஆண்டி பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) வெளியிட்டுள்ள அறிக்கையில், டி-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னதாக ஆண்டி பிளவர் குழத்துடன் இணைந்திருப்பதை உறுதிப்படுத்தியது.
ஆண்டி பிளவர் முன்னர் 2009 – 2014 இடைப்பட்ட காலத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.
இவரது நியமனம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அஜிசுல்லா ஃபாஸ்லி,
ஆண்டி பிளவர் ஆப்கான் அணியுடன் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவரது பரந்த அனுபவம் டி-20 உலகக் கிண்ணத்தில் எமக்கு உதவ மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
ஆண்டி பிளவர் ஜிம்பாப்வே அணிக்காக 63 டெஸ்ட் மற்றும் 213 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, சிறந்த விளையாட்டு வாழ்க்கையை கொண்டிருந்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]