டிரம்ப்பின் வெற்றியை தொடர்ந்து கனடாவிற்குள் மெக்சிக்கோ குடிவரவாளர்களின் ஜன பிரளயம்?
டிரம்ப்பின் தேர்தல் வெற்றி காரணமாக ஒரு சாத்தியமான மெக்சிக்கோ குடிவர வாளர்களின் ஜன பிரளய வருகைக்கான ஆயத்தங்களை கனடிய மத்திய அரசாங்கம் செய்கின்றது.
இந்த வாரம் குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா அதிகாரிகளின் மற்றும் சில திணைக்களங்களின் உயர்மட்ட கூட்டம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிசெம்பர் 1-ந்திகதியிலிருந்து கனடா வருவதற்கான மெக்சிக்கோ மக்களிற்கான விசா தேவையை தளர்த்த கனடா ஆயத்தமாகின்றது. இந்த கட்டுப்பாடு 2009லிருந்து நடைமுறையில் உள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் யு.எஸ்சிற்கும் மெக்சிக்கோவிற்கும் இடையில் சுவர் ஒன்று எழுப்புவதாகவும் வெகு விரைவில் ஆவணமற்ற தொழிலாளர்கள் மற்றும் சட்டவிரோத குடியிருப்பாளர்களை நாடு கடத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
விசா தேவை தளர்த்தப்படுமாயின் மெக்சிக்கர்களின் அகதி கோரிக்கை எண்ணிக்கை அதிகரிக்கும் என ரொறொன்ரோவை சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் லோர்ன் வால்ட்மன் தெரிவித்துள்ளார். டிரம்பின் தேர்தல் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கம் எனவும் அனுமானிக்கின்றார்.
கடந்த ஏப்ரல் மாதம் எட்டு பக்கங்களை கொண்ட கொள்கை காகிதம் ஒன்றை வெளியிட்டார். மெக்சிக்கோ எல்லையில் பல-பில்லியன் டொலர்களில் சுவர் கட்டுவதாகவும் ஆனால் அதற்கான செலவை மெக்சிக்கோ கட்ட வேண்டும் என வற்புறுத்த போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொது மன்னிப்பு இருக்கமாட்டாதென அரிசோனா பேரணியில் தெரிவித்தார். “சட்ட அந்தஸ்து பெற முடியாது அல்லது எங்கள் நாட்டிற்குள் சட்ட விரோதமாக நுழைந்து யு.எஸ் குடியுரிமை பெற முடியாது. இது உலகத்திற்கு எங்கள் செய்தி” என தெரிவித்திருந்தார்.