அநுராதபுரம்(anuradhapura) அலையாபத்து பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இரத்தினபுரி(ratnapura) பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஒன்பதாம் தரத்தில் கல்வி கற்கும் இந்த மாணவி, பாடசாலைக்கு வராமல் இளைஞனுடன் சென்றுவிட்டு மறுநாள் பாடசாலைக்கு வந்ததாக அதிபர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாணவியை அச்சுறுத்திய காதலன்
“டிக் டொக்”(tik tok) சமூக ஊடகங்களால் அடையாளம் காணப்பட்ட இளைஞனுடன் சிறுமி கொண்டிருந்த காதல் உறவின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய காதலருக்கு மாணவி தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

பின்னர் குறித்த புகைப்படங்களை முகநூலில் வெளியிடுவேன் என மாணவியை அச்சுறுத்திய காதலன், குருநாகல்(kurunegala) பகுதிக்கு அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.