வேட்டைக்காரன் படத்தில் நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து அவரது மகன் சஞ்சயும் சிறிது நேரம் நடனமாடினார். அதேபோல் இப்போது ஜெயம்ரவியும் தனது மகன் ஜோன்ஸ் ஆரவை தான் நடித்து வரும் டிக் டிக் டிக் என்ற படத்தில் அறிமுகம் செய்கிறார். அவர் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது சஸ்பென்சாக உள்ளது.
மேலும், சக்தி செளந்திரராஜன் இயக்கும் இந்த படம் விண்வெளியில் நடக்கும் கதையில் உருவாகிக்கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளரான டி.இமானும் டிக் டிக் டிக் பட டீசர் அருமையாக வந்திருப்பதாக தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.