ரொறொன்ரோ- வெள்ளிக்கிழமை பிற்பகல் தீயணைப்பு படையினர் பாரிய ஐந்து-அலாரம் தீயை அணைக்க மணித்தியாலக்கணக்காக போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
டவுன்ரவுனில் பால்ட்வின் வீதியில் அமைந்திருந்த நூடில்ஸ் பார் உணவகத்தில் ஆரம்பித்த தீ பரவிய வேகத்தினால் அருகமையில் அமைந்திருந்த நான்கு வீடுகளையும் தாக்கியுள்ளது. பிற்பகல் 1.20மணியளவில் ஆரம்பித்த தீ 30-நிமிடங்களின் பின்னர் ஐந்து-அலாரம் சுவாலைகளாக உயர்ந்ததென தெரிவிக்கப்பட்டுள்ளது.
25-ற்கும் மேற்பட்ட தீயணைப்பு டிரக்குகள் 100 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாலை 4-மணியளவில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்வென தலைமை தீயணைப்பு அதிகாரி தெரிவித்தார்.
உணவகத்தின் சமையல் அறையில் இருந்து வெளிப்பட்ட தீ கூரை மற்றும் சுவர்களை தாக்கியுள்ளது. சம்பவத்திற்கான காரணம் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
பரபரப்பான மதிய நேரத்தில தீ ஆரம்பித்தது.
எவரும் காயமடைந்ததாக அறிவிக்கப்படவில்லை.
குறிப்பிட்ட கட்டிடத்தின் அருகாமையில் சம்பவம் நடந்த போது இருந்தவர்களை நேர்காண விரும்புவதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.