அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டார்.
பூஸ்டர் டோஸ் எனப்படும் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்த அந்நாட்டு நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அனுமதியளித்துள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகளும் தொடங்கியுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் நோய் தொற்று அபாயம் உள்ள இளைஞர்கள் 3-வது தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம் என்றும் முதல் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 மாதத்துக்கு பின் 3-வது டோசை போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் நேற்று திங்கட்கிழமை செலுத்திக்கொண்டார்.
78 வயதான ஜோ பைடன் தடுப்பூசியின் முதல் டோசை கடந்த ஆண்டு டிசம்பர் 21-ம் திகதியும், 2-வது டோசை ஜனவரி 11-ம் தேதியும் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
70 வயதான அமெரிக்காவின் முதல் பெண்மணி ஜில் பைடனும் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் மைக்கேல் லரோசா தெரிவித்துள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]