அமெரிக்க ஓபனில் ஆடவர்க்கான ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, டேனியல் மெட்வெடேவ் சம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நியூயோர்க்கின் ஆர்தர் ஆஷே அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-4, 6-4, 6-4 என்ற நேர் செட்களில் உலக நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி, உலகின் நம்பர் 2 வீரரா டேனியல் மெட்வெடேவ் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
இந்த வெற்றியின் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது ரஷ்ய வீரர் என்ற பெருமையையும் 25 வயதான மெட்வெடேவ் பெற்றார்.
இதேவேளை உலக நம்பர் 1 வீரரான ஜோகோவிச் ஏற்கனவே இந்த ஆண்டு அவுஸ்திரேலிய ஓபன், பிரஞ்சு ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டங்களை வென்றிருந்தார்.
34 வயதான செர்பிய வீரர் ஜோகோவிச் 21 ஆவது கிராண்ட்ஸ்லாம் ஆண்கள் பட்டத்தையும் இதுவரை வென்றுள்ளார்.