ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றால், நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கொடுப்பனவுகள் அனைத்தும் நிறுத்தப்படும் எனவும், அவர்களின் செலவுக்காக பொதுமக்கள் பாதுகாப்பு நிதியத்திலிருந்து ஒரு தொகை நிதியினை மாத்திரம் வழங்குவோம் எனவும் அக்கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
குருணாகலயில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இதுவரை நாட்டில் இருந்த ஜனாதிபதிகளுக்கும், அவர்கள் இறந்ததன் பின்னர் அவர்களது பிள்ளைகள் மனைவி ஆகியோருக்கும் வாழ்க்கைச் செலவாக பாரியளவு பொது நிதி வழங்கப்படுகின்றது.
இது எமது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய சுமையாகக் காணப்படுகின்றது. இதனால், இந்த முறைமையை மாற்றியமைக்க வேண்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார் .