அதிபர் ரணில் விக்ரமசிங்க தனக்கு எதிராக மூன்று விளம்பர உத்திகளை பயன்படுத்தவுள்ளதாக ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிரான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்காக ரணில் விளம்பர நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 1983, 1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு வன்முறைகள் மற்றும் 2022 மே ஒன்பதாம் திகதி சம்பவங்களை அடிப்படையாக வைத்து ஜேவிபியை இலக்குவைக்க வேண்டுமென இந்த நிறுவனங்கள் கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்திரமற்ற நிலை
தேசிய மக்கள் சக்தியுடன் தொடர்புபட்ட நபர் ஒருவரிடம் இதற்கான பொறுப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அனுரகுமார குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக கடந்த கால சம்பவங்களை நினைவுபடுத்துவதன் மூலம் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்த ரணில் விக்ரமசிங்க முயல்கின்றார் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.