ஜேர்மனியில் உள்ள ரயில் நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிசார் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் Munich பகுதியில் உள்ள Unterföhring ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பலரும் காத்திருந்தனர்.
அப்போது திடீரென்று ஒரு நபர் அங்கிருந்த பெண் பொலிசாரிடம் இருந்த துப்பாக்கியை பிடுங்கி, அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் அப்பெண் பொலிசார் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், ரயில் நிலையத்தில் இருந்த சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பெண் பொலிசாரைத் தவிர மற்றவர்களுக்கு பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது என்றும் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தாக்குதல் நடத்தியவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாகவும், சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.
திடீரென்று நடந்த இத்தாக்குதலால் அங்கிருக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு வருவதுடன், ரயில் நிலையத்தை பொலிசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.