ஜெயலலிதா அண்ணன் மகள் ஜெ. தீபா வீட்டின் மீது நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தி. நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா.
இவா் தீ. நகரில் உள்ள சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு தீவிர அரசியலில் குதித்து எம். ஜி. ஆர்.
அம்மா. தீபா பேரவை என்ற பெயரில் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட ஜெ. தீபா வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஆனால் அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ரத்து செய்தார். இதனால் ெஜ. தீபா தனது வெற்றி பிரகாசமாக இருப்பதால் ஆளுங்கட்சியினர் சதி செய்து எனது வேட்பு மனுவை நிராகரித்து விட்டனர் என்று குற்றம் சாட்டினர்.
அதேநேரம் ஜெ. தீபா பேரவையின் உறுப்பினர் சேர்க்கையில் பல லட்சம் மோசடி நடந்துள்ளதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெ. தீபா வசித்து வரும் சிவஞானம் சாைலயில் உள்ள வீட்டில் மீது நேற்று நள்ளிரவு ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் ஒன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகறிது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெ. தீபா எனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் என் வீட்டை மர்ம நபர்கள் தொடர்ந்து கற்கலை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் மீண்டும் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனவே ஆட்டோவில் தப்பி சென்ற மர்ம நபர்களை பிடித்து இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பின்னணியில் உள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவஞானம் தெருவில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை பெற்று மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் சிறிது நேரம் தி. நகரில் பரபரப்பு ஏற்பட்டது.