ஜெரூசலம் என்பது பலஸ்தீனர்களின் தார்மீகத் தலைநகரம் எனவும் அமெரிக்கா அதனை இஸ்ரேலுக்கு தாரை வார்க்க நினைப்பது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்,
அமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு உலகளாவிய இஸ்லாமியர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்ப்பதாக அமைந்துள்ளதாகவும் கிழக்கின்முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட் கூறினார்.
ஜெரூசலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட் ரம்ப் அறிவித்துள்ளதற்கு உலக நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையிலேயே கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட குறிப்பிட்டார்,
மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் கிழக்கின் முதலமைச்சர்,
இஸ்ரேல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசம் அல்ல ,அவர்கள் பலஸ்தீனில் வாழும் அப்பாவி முஸ்லிங்களின் இடங்களை அபகரித்து பலாத்காரமாக வாழ்ந்து வருவதாவே இஸ்லாமியர்களான நாம் கருதுகின்றோம்,
இதன் மூலம் மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்டுவதாகதெரிவிக்கும் அமெரிக்காவின் கொள்கை போலியானது என்பது இந்த தீர்மானம் மூலம் தெரிய வருகின்றது.
இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருப்பதானது மத்திய கிழக்கில் மேலும் மோதல்களை அதிகரிக்கவே வழி வகுக்கும்,
இஸ்ரேலினால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலப்பரப்பை ஐக்கிய நாடுகள் சபையோ எனைய சர்வதேச நாடுகளோ அங்கீரிக்காத நிலையில் அமெரிக்கா அங்கீகரித்திருப்பதானது சர்வதேச ரீதியலான நாடுகளிடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது,
பலஸ்தீன மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதையோ அப்பாவி உயிர்கள் கொல்லப்படுவதை நிறுத்துவதற்கோ அமெரிக்கா முன்வராமல் மேலும் அவற்றை அதிகரிக்கும் விதமாக நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாது
அத்துடன் 1993ஆண்டு தலைநகர் குறித்த தீர்மானங்கள் பேச்சுவார்த்தையின்மூலம் மாத்திரமே தீர்வு எட்டப்படும் என ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதியின் தீர்மானம் கண்டிக்கத்தக்கது,
பலஸ்தீனர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ள இந்த அநீதிக்கு எதிராக இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணைந்து கண்டனத் தீர்மானமொன்றை நிறைவேற்றஅரசாங்கத்தினை வலியுறுத்த வேண்டும் என கிழக்கு மாகணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.