ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை பார்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாராட்டி இருக்கிறார்.
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘ஜெய் பீம்’. பழங்குடியின மக்களின் வாழ்வியலை மையமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
பிரபலங்கள் பலரும் இப்படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் படத்திற்கு பாராட்டும், படக்குழுவினருக்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, ஜெய் பீம் படத்தை பார்த்து, சூர்யா மற்றும் இயக்குனர் ஞானவேலுவை பாராட்டி இருக்கிறார்.
முன்னதாக படத்தை தொலைக்காட்சியில் பார்த்த நல்லக்கண்ணு, திரையில் காண விருப்பம் தெரிவித்திருந்தார். அதற்கேற்ப படத்தை என்.எப்.டி.சியில் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டது.
அவருடன் நடிகர் சூர்யா, சூர்யாவின் தந்தை சிவக்குமார், இயக்குநர் த.செ.ஞானவேலு, 2டி நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
படத்தைப் பார்த்துவிட்டு நல்லக்கண்ணு, நடிகர் சூர்யாவின் கன்னத்தில் செல்லமாக வருடிக் கொடுத்து தனது பாராட்டை பதிவு செய்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]