ஜெயலலிதா சமாதியில் சசிகலா செய்த மூன்று சபதங்கள்? வெளியான அதிர்ச்சி தகவல்!
அதிமுக- பொதுச் செயலாளரான சசிகலா ஜெயலலிதா சாமதியில் செய்த மூன்று சபதங்கள் என்ன என்பது பற்றி தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
முறைகேடாக சொத்துக்குவித்த வழக்கில் சசிகாலவுக்கு உச்சநீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
இந்நிலையில் அவர் கடந்த 15 ஆம் திகதி போயஸ் கார்டனிலிருந்து பெங்களூர் சிறைக்குப் புறப்பட்டார். அப்போது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்தூவி மரியாதை செய்தார்.
அப்போது திடீரென அவர் தரையில் அடித்து சத்தியம் செய்தார். தொடர்ந்து மூன்று முறை தரையிலடித்த சசிகலா, கடுங்கோபத்துடனும் லேசான அழுகையுடனும் காணப்பட்டார்.
அவர் அங்கு என்ன கூறி சபதம் செய்தார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் தற்போது அவர் என்ன சபதம் செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதில் முதல் சபதம், ஜெயிலுக்குப் போனாலும் நான் விரும்பிய ஆட்சியை இங்கே அமையப் போகிறது. இரண்டாவது சபதம், என் முதல்வர் கனவைத் தகர்த்த ஓபிஎஸ்சை, அரசியல்ல தலையெடுக்க விடாம ஆக்குவேன் என்பது.
மூன்றாவது சபதம், நான் ஜெயிலுக்குப் போறேன்னு சந்தோசப்படுற எதிரி கட்சிகளோட முகத்தில் கரியைப் பூசுற மாதிரி சீக்கிரமே வெளியே வந்துகாட்டுறேன்கிறதுதான் என்று கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.