மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ வெண்கலச் சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் சிலையை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்துவைத்தனர். சிலை திறக்கப்பட்டதும் அ.தி.மு.க தொண்டர்கள் சிலையின் காலடியில் அமர்ந்து ‘அம்மா…’ என்று கதறி அழுதனர். மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதையடுத்து ‘நமது அம்மா’ என்ற பெயரில் நாளிதழும் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜெயலலிதா சிலையை வடிவமைத்தவருக்கு மோதிரம் பரிசாக அளிக்கப்பட்டது.