ஜெயலலிதாவுக்காக ராதாரவி செய்து வரும் நேர்த்திக்கடன்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி சாமி தரிசனம் செய்தார். அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமலை அம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்த நடிகர் ராதாரவி, பின்னர் நெய்தீபம் ஏற்றி, நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டார்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண உடல் நலம் பெற வேண்டி ராமேஸ்வரத்தில் தொடங்கி தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்துக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறேன். கடைசியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.