ஜெயலலிதாவின் பங்களா சிறையாக மாறுகிறது: யாருக்காக தெரியுமா?
சசிகலாவுக்காக போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவை சிறையாக மாற்ற தமிழக அரசு முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நான்கு பேர் குற்றவாளி என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதில் ஜெயலலிதா இறந்தவிட்ட காரணத்தினால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மீதம் உள்ள மூவரும் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
அதைத் தொடர்ந்து சிறையில் உள்ள சசிகலா உள்ளிட்டோரை தமிழகத்திற்கு மாற்றுவதற்காக தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சசிகலா தமிழகத்திற்கு மாற்றப்பட்டால், சென்னை புழல் சிறையில் அடைக்காமல், போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் பங்களாவில் தங்கவைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளதாகவும், இதனால் ஜெயலலிதாவின் பங்களாவை சிறையாக மாற்ற வேண்டும் என்று தற்போது உள்ள அரசு தீவிர முயற்சி காட்டி வருவதாகவும், அதற்காக சட்ட ஆலோசனைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் உச்சநீதிமன்றம் அனுமதியில்லாமல் சசிகலாவை உடனடியாக தமிழகத்திற்கு மாற்ற முடியாது என்று கூறப்பட்டது.
ஆனால் தமிழக அரசும், கர்நாடக அரசும் இணைந்து முடிவெடுத்து சசிகலாவை சிறை மாற்ற செய்ய சட்டத்தில் இடமிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.