திரையுலக பயணத்திலும், சொந்த வாழ்க்கையிலும் தடுமாற்றங்களை சந்தித்து வரும் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய படத்திற்கு ‘பிரதர் ‘ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பிரதர்’ எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் , ராவ் ரமேஷ், அச்சுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, எம். எஸ். பாஸ்கர், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விவேகானந்த் சந்தோசம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்திருக்கிறது.
இந்தப் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், மற்றும் ஓடியோ உரிமையை வாங்கி இருக்கும் நிறுவனம் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஆகியவை போஸ்டராகவும் , காணொலியாகவும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் தற்போது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், விரைவில் டீசர் வெளியிடப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.