ஜெயம் ரவியின் போகன் திருடபட்ட கதையா ? அதிர்ச்சி தகவல்
ஜெயம்ரவி, ஹன்ஷிகா, அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள படம் போகன். இப்படத்தை ரோமியோ ஜூலியட் படத்தை இயக்கிய லக்ஷமன் உருவாக்கியுள்ளார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அதாவது டிசம்பர் 23m தேதி வெளிவருகிறது என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இந்த கதை, என்னுடையது என்று சில மாதங்களுக்கு முன்பே எழுத்தாளர் சங்கத்தில் பஞ்சாயத்தை கூட்டிவிட்டார் இந்த ஆண்டனி. அவர்களும் ஆண்டனி சொல்வது தான் உண்மை என்று ஒப்புக்கொண்டாலும், அதன் பிறகு எழுத்தாளர் சங்கம் தரப்பில் இவருக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்கிறது ஆண்டனி வட்டாரம்.
நேற்று கோயம்பேடு பகுதியில் வந்து கொண்டிருந்த இவரை, சிலர் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பலத்த காயமுற்ற அவர் மருத்துமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டாராம். என்னை தாக்கியது டைரக்டர் லட்சுமணன் ஏற்பாடு செய்த குண்டர்கள்தான் என்று வலுவான வாதம் வைக்கிறார் ஆண்டனி.
தற்போது வரை இதை பற்றி இன்னும் போகம் படக்குழு வாய்திறக்கவில்லை, லக்ஷ்மன் பேசினால் தான் உண்மைக்கு தீர்வு கண்டு சுமுகமாக முடியும் . அது வரை எதாவது கிளறி விட்டுத்தான் இருக்கும் இந்த சினிமா உலகம்.