புலம்பெயர் தமிழர்களின் பிரசாரத்தின் ஒரு பகுதியே இலங்கையின் செயற்பாடுகள் குறித்து ஜெனீவாவில் எழுந்த அதிருப்திகள், என அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”இலங்கையின் இறுதி யுத்தத்துடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பினர்கள் கவலையையும், சில குற்றச்சாட்டுகளையும் முன்வைத்துள்ளனர். அவர்களது கவலையும், அதிருப்தியும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.
ஜெனீவாவில் எழுந்த அதிருப்திகளை சரி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் மேலும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது” எனத் தெரிவித்தார்.