பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்கிவிட்டு சர்வதேச நியதிகளுக்கு உடன்படும் விதத்தில் புதிய சட்டங்களை உள்ளடக்கிய புதிய அரசியல்யாப்பை கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் ஜெனீவா மாநாட்டில் அறிவிப்புச் செய்துள்ளது.
இலங்கை நிலவரம் தொடர்பில் 22 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் இந்த அறிவிப்பை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.
இந்த அறிவித்தலை விடுக்க முன்னர், நோர்வே உட்பட பல நாடுகள் இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை நீக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளன.
அத்துடன், வடக்கில் 22000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களிலும் ஏனையவற்றை கட்டம் கட்டமாக விடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த மாநாட்டில் இன்னும் 11 நாடுகள் இலங்கை தொடர்பில் தமது பரிந்துரைகளை முன்வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.