ஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்ற அனுசரணை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கடந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சபை முதல்வர் லக்ஷமன் கிரியெல்ல, இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளதாகவும், எனவே அந்த தீர்மானதிற்கு இணை அனுசரணை வழங்குவதில் தவறேதும் இல்லை என கூறியதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் சமீபத்திய அறிக்கையின் உள்ளடக்கங்கள் முன்னைய ஆண்டுகளில் வெளியான அறிக்கைகள் போன்றே தவிர, இலங்கை ஒரு இறையாண்மை நாடுதானா என்பதை கேள்விக்கு உட்படுத்துகிறது என குறிப்பிட்டார்.
அத்தோடு இலங்கை தொடர்பிலான 30/1 தீர்மானம் ஊடக இராணுவதினரை காட்டிக் கொடுக்க முற்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
எனவே ஜெனீவாவில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் இலங்கையையும் மக்களையும் காட்டிக்கொடுக்க முன்னர் சில விடயங்களை புரிந்துகொள்ள வேண்டும் என கூறினார்.