ஜெனிவா விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே எதிர்க்கட்சியின் நகர்வுகள் காணப்படுவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார்.
அத்துடன் யுத்த குற்றச்சாட்டுகள் பொய்யென சர்வதேச நிபுணர்கள் தெரிவித்தும் நல்லாட்சி அரசாங்கம் அதனை நிராகரித்து யுத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு இணை அனுசரணை வழங்கியது.
யுத்த குற்றச்சாட்டு குறித்த விசேட நிபுணர்களான டெஸ்மன் டி சில்வா, ஜெப்ரி நைஸ், மைக்கல் கிரேக், மைகள் நியூட்டன், ஜோன் ஹோம்ஸ், ரொபின் நிக்சன் ஆகிய ஆறுபேர் இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெறவில்லை என கூறியிருந்த போதும் நல்லாட்சி அரசாங்கமே ஜெனிவாவில் 30/1 பிரேரணைக்கு இணை அனுசரணை வழங்கி யுத்த குற்றம் இடம்பெற்றதாக ஏற்றுக்கொண்டனர்.
எனவே இப்போதும் ஜெனிவா விவகாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை என்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதன் மூலமாக ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்தே நகர்த்தப்படுகின்றது என்பது தெட்டத்தெளிவாக தெரிகின்றது.
இனியாவது நாட்டை காட்டிக்கொண்டிருக்கும் விதமாக கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, 27/2 இன் கீழ் விசேட கூற்றொன்றை முன்வைத்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, கருத்து சுதந்திரம் மீதான அடக்குமுறை மற்றும் ஊடகவியலாளர்களின் மீதான அச்சுறுத்தல் குறித்தும் சபையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]