வடக்கில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் போராட்டங்களை நடத்திய குறிப்பிட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தைக செய்வதற்கு நான் தயாராகி அவர்களை அழைத்தபோது அவர்கள் வரவில்லை.
அவ்விதமானவர்களுக்கு எவ்வாறு தீர்வினை வழங்குவது என்று நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் நீதி அமைச்சானது எதிர்வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை மையமாகவைத்து எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கில் நீதிக்கான அணுகல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டதைப் போன்று அடுத்தகட்டமாக கிழக்கிலும் பின்னர் தெற்கிலும் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அவை இந்த ஆண்டுகள் முன்னெடுப்பதற்கு நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
நீதி அமைச்சின் நீதிக்கான அணுகல் வேலைத்திட்டமானது எதிர்வரும் கூட்டத்தொடரில் ஜெனிவாவை சமாளிப்பதற்கும் சர்வதேசத்தினை ஏமாற்றுவதற்குமாக முன்னெடுக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதி அமைச்சர் அலி சப்ரி பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீதிக்கான அணுகல் வேலைத்திட்டமான நீதி அமைச்சால் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதொரு விடயமாகும். வடக்கு போரினால் பதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு பல்வேறு பட்ட நீதித்துறை சார்ந்த பிரச்சினைகள் ஏனைய மாகாணங்களை விடவும் அதிகமாக காணப்படுகின்றது என்ற அடிப்படையில் தான் வடக்கு மாகாணத்தில் முதலில் இந்த திட்டத்தினை செயற்படுத்துவது என்று தீர்மாகிக்கப்பட்டுது.
மேலும்ரூபவ் வலிந்து காணாமலாக்கப்பட்டவாகளுக்கான பணியகம், இழப்பீட்டுக்கான பணியகம், தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் ஆகிய கட்டமைப்புக்கள் எனது அமைச்சின் அதிகாரத்திற்கு உட்பட்ட விடயமாகும்.
ஆகவே அந்த மூன்று கட்டமைப்புக்களும் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்புடையவை. அந்த அடிப்படையில் தான் வடக்கிற்கான விஜயத்தினை நான் உள்ளிட்ட எனது அமைச்சின் அதிகாரிகள் முன்னெடுத்திருந்தார்கள்.
இந்நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு பகுதியினர் அங்கு போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். அவர்களை நான் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்திருந்தேன். ஆனால் அவர்கள் வருவதற்கு மறுத்து விட்டார்கள். பேச்சுவார்த்தைக்கே வருவதற்கு மறுப்பவர்களுக்கு எவ்விதமாக தீர்வினை வழங்குவது?
நான், நீதி அமைச்சர் பதவியை வைத்துக்கொண்டு அரசியல் செய்யவில்லை. நான் எனக்கு கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி வடக்கோரூபவ் கிழக்கோரூபவ் தெற்கோ மக்களுக்கு என்னாலான நன்மையான விடயங்களை செய்வதற்கே முயற்சிக்கின்றேன்.
அந்தவகையில் தான் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகையை வழங்குவதற்கு முயற்சிகளை எடுத்திருந்தேன். அவர்களின் நீண்டகாலமாக போராடிக்கொண்டிருப்பதை நான் அறிந்துள்ளேன். அதனால் அவர்கள் மீது எனக்கு கரிசனை உள்ளது. மேலும் அவர்களின் போராட்டம் நியாயமானது. ஜனநாயக ரீதியாக அவர்கள் போராடத் தகுதி உடையவர்கள்.
ஆனால் அவர்களின் அன்றாட வாழ்க்கைரூபவ் எதிர்காலம் குறித்து நான் கருத்திற்கொள்கின்றேன். அந்த அடிப்படையில் தலா ஒருஇலட்சம் ரூபா படி குடும்பங்ளுக்கு வழங்க முயற்சித்தேன். ஆனால் ஒருசிலதரப்புக்கள் அதனை குழப்புவதற்கு முயற்சித்தன.
இருப்பினும் முதற்கட்ட முயற்சியில் தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் ஆயிரும்பேருக்கு நூறு மில்லின் ரூபா வழங்கப்பட்டுள்ளன. இதனைவிடவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், யாழ்.பல்கலை சட்டபீட மாணவர்கள் உள்ளிட்டவர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளேன்.
தேசிய ஒருமைப்பாட்டை, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் முதலில் அப்பணியை வடக்கில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். அதனையே தான் முன்னெடுத்துள்ளேன். மேலும் கொக்குவில் இந்துக்கல்லூருக்கு ஒருவருடத்திற்கு முன் திட்டமிட்டு 42மில்லியன் ரூபாவினை வழங்கியிருந்தேன்.
ஆகவே இவையெல்லாம் ஜெனிவாவை மையப்படுத்தி செயற்பட்ட விடயங்கள் என்று கூறுவது பொய்யானதொரு விடயமாகும். அரசியல் ஆதாயம் தேட விளைபவர்களே இவ்விதமான கருத்துக்களை மக்கள் மத்தியில் கூறுகின்றார்கள்.
நான் தற்போதும் பாதிக்கப்பட்ட மக்கள் உட்பட வடக்கு, கிழக்கு என்று எந்த வித்தியாசமும் இல்லாது யாருடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் இயலுமான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் முயற்சிகளை எடுப்பதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]