ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரை பெற்றோல் கப்பலொன்றை வரவழைக்கும் இயலுமை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இல்லையென சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, 4 மாதங்களுக்குத் தேவையான 100, 000 மெற்ரிக் தொன் எரிவாயுவை உலக வங்கியின் ஒத்துழைப்புடன் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கை இன்று அல்லது நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஜூலை 11 ஆம் திகதிக்கும் 15 ஆம் திகதிக்கும் இடையில் கப்பலொன்று வரும் வரை அத்தியாவசிய சேவைகளுக்கு தேவையான டீசல் மாத்திரமே கையிருப்பில் உள்ளதா குறிப்பிட்ட சாகல ரத்நாயக்க, ஜூலை 6,10,16,19,21,31 ஆம் திகதிகளில் 33 ஆயிரம் மெற்ரிக் தொன் எரிவாயு நாட்டுக்கு கிடைக்கவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.