பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜூலி தற்போது எப்படி வெளியில் செல்கிறார் தெரியுமா? பிக் பாஸ் வீட்டில் நுழைந்த புதிதில் ஜூலிக்காக தான் அந்த நிகழ்ச்சி ஓடியது. நாட்கள் செல்ல செல்ல ஜூலியை பார்வையாளர்கள் வெறுக்கத் துவங்கினர். அவரின் கபட நாடகம் யாருக்கும் பிடிக்காமல் போனது.
பிக் பாஸ் நிகழ்ச்சியால் ஜூலி பலரின் வெறுப்பை சம்பாதித்து விட்டார். இதனால் தற்போது வெளியே சென்றால் துப்பட்டாவால் முகத்தை மூடிக் கொண்டு செல்கிறார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு அவருக்கு ஆதரவாக பேசி கெட்டப் பெயர் எடுத்த பரணியை சந்தித்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார் ஜூலி.
பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது என்னா ஆட்டம், என்னா வில்லத்தனம் செய்தீங்க ஜூலி, இப்ப முகத்தை வெளியே காட்ட முடியாத நிலை வந்துவிட்டதே என்று நெட்டிசன்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சின்னம்மாவையே வசை பாடிய ஜூலி தற்போது பிக் பாஸால் வெளியே தலை காட்ட முடியாமல் பரிதாப நிலையில் உள்ளார்.