இந்தியாவில் இடம்பெறும் ஜி-20 மாநாட்டில் ஏன் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கலந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விளாடிமிர் புட்டினிற்கு எதிராக பிடியாணையை பிறப்பித்தது. அவர் உக்ரைனில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார் என குற்றம்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக ரஸ்யாவுக்கு வெளியே சென்றால் தான் கைதுசெய்யப்படும் நிலையை புட்டின் தவிர்க்க விரும்புகின்றார்.
ஆபிரிக்காவில் சமீபத்தில் இடம்பெற்ற பிரிக்ஸ் மாநாட்டை அவர் தவிர்த்தார்.
கடந்த வருடம் ஐசிசியின் பிடியாணைக்கு முன்னரே அவர் பாலியில் இடம்பெற்ற ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படுவதை அவர் தவிர்க்க விரும்புகின்றார் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்னர் குழுவின் கிளர்ச்சி காரணமாக ரஸ்யாவில் புட்டினின் பிடியில் தளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புட்டினிற்கு பதில் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஜி-20 மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்படுவதை ரஸ்யா கடுமையாக எதிர்க்கும்.