ஜம்மு காஷ்மீரில் 8 வீரர்கள் உயிரிழப்பு: மோடி, ராஜ்நாத் சிங் இரங்கல்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இத்தாக்குதலை பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா குழுவை சேர்ந்தவர்கள் நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் இறந்த வீரர்களின் தியாகத்திற்கு தான் தலை வணங்குவதாகவும், மேலும் அவர்களின் மறைவு தனக்கு பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதில் காயமடைந்த விரர்கள் விரைவில் குணமாக வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
I salute the courage of the CRPF personnel martyred today in J&K. They served the nation with utmost dedication. Pained by their demise.
- இச்சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 8 துணை ராணுவ படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது.தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும், காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
My heart goes out to the families of the CRPF men who lost their lives in Pampore. I also pray for the speedy recovery of the injured.