“1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் வெற்றியின் 50 ஆண்டுகால கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ஜம்மு-காஷ்மீரின் வில்காம் நோக்கி தமா வழியாகச் செல்லும் பாதையில் அமைந்துள்ள சாம்போரா பாலத்தில் வைத்து வெற்றிச்சுடருக்கு பொதுமக்களால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு மற்றும் உள்ளுர் இளைஞர்களால் ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியும் முன்னெடுக்கப்பட்டது”
வில்கம் (ஜம்மு-காஷ்மீர்): 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவின் 50 ஆண்டுகால வெற்றியின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, தமா வழியாக ஜம்மு-காஷ்மீரின் வில்காம் நோக்கி செல்லும் பாதையில் அமைந்துள்ள சம்போரா பாலத்தில் வைத்து வெற்றிச்சுடருக்கு பொதுமக்களால் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
‘ஸ்வர்னிம் விஜய் வர்ஷ்’ கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கடந்த 2020 டிசம்பர் 16 அன்று தேசிய போர் நினைவுச்சின்னத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியால் நான்கு வெற்றிச் சுடர்கள் ஏற்றப்பட்டு அவை நாட்டின் நான்கு திசைகளுக்கும் அனுப்பப்பட்டன.
இவ்வாறு வடக்கு நோக்கி பயணித்த அனுப்பபட்ட வெற்றிச்சுடர் ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ள ராஷ்டிரிய ரைஃபிள்ஸ், தலைமையகம் நோக்கி இறுதியான பயணத்தினை முன்னெடுத்தது.
இந்நிலையில், வெற்றி சுடர் வில்காமில் உள்ள ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸின் பிரதான வாயிலுக்கு கொண்டு வரப்பட்டு, தேசிய வீரர்களால் அமைக்கப்பட்டிருந்த கொண்டாட்டப் பகுதியை நோக்கி வெற்றிச்சுற்றுப்பாதையில் இறுதியாக பயணித்து தலைமையகத் தளபதியிடம் (பிரிவு-8) ஒப்படைக்கப்பட்டது.
போர் வீரர்கள் மற்றும் தலைமையகம தளபதி (பிரிவு-8) ஆகியோரின் முழு மரியாதைகளுடன் மாலை அணிவிக்கும் விழா நிகழ்த்தப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான முன்னாள் படைவீரர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினர், சிவில் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் காஷ்மீரி நடனம், பாடசாலை மாணவர்களின் தேசபக்தி பாடல் மற்றும் ‘ஓப் கசாப்’ இன் மெய்மறக்கும் போர் சித்தரிப்பு உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்திய துருப்புக்களில் டாங்கர் பிரிவால் முன்னெடுக்கப்பட்ட நாடகம் மற்றும் மூர்க்கத்தனமான தோற்றமுடைய கோர்கா சிப்பாய்கள் நிகழ்த்திய ‘குக்ரி நடனம்’ பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்திழுத்தது.
அதனைத்தொடர்ந்து 1971 ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரில் தியாகங்களைச் செய்து வெற்றியை ஈட்டித்தந்த முன்னாள் போர் வீரர்களுக்கான கௌரவம் வழங்கப்பட்டது.
அதன்பின்னர், ராஷ்டிரியா ரைபிள்ஸ் தலைமையகத்திலிருந்து வெற்றிச்சுடர் 59ஆவது நடுத்தர ரெஜிமன்ட் , 19ஆவது பீரங்கி படைப்பிரிவு ஆகிய முகாம்கள் நோக்கி கொண்டாட்டங்களுக்காக பயணமானது.