ஜப்பானியர்களின் கிரிக்கெட்டுக்கு உதவும் நோக்கில் அந் நாட்டு கிரிக்கெட் சங்கத்துடன் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.
ஒத்துழைப்புக்கள், பரிமாற்றங்கள மற்றும் நிபுணத்துவத்தை வழங்கி ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்தும் பொருட்டே இந்த புரந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைய, வீரர்கள், அணிகள், பயிற்றுநர்கள், மைதான பராமரிப்பாளர்களை அங்கு அனுப்பி ஜப்பானின் கிரிக்கெட்டை மேம்படுத்த இலங்கை உதவு உள்ளது.
அத்துடன் ஜப்பானில் ரி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் பொருட்டு இலங்கை அணிகளை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அங்கு அனுப்பி வைக்கும். அத்துடன் ஜப்பான் கிரிக்கெட் அணிகளையும் வரவேற்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் தயாராக இருக்கிறது.
லங்கா பிறீமியர் லீக் அணிகளின் வீரர்களுடனும் பயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஜப்பான் வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன தலைமையகத்தில் நடைபெற்ற வைபவத்தில் இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா, ஜப்பான் கிரிக்கெட் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நயோக்கி அலெக்ஸ் மியாஜி ஆகியோர் கைச்சாத்திட்டனர்.
இந்த வைபவத்தில் இலங்கைக்கான ஜப்பான் பிரதி தூதுவர் கொட்டாரோ கட்சுகி, ஸ்ரீலங்கா கிரிக்கெட் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, ஜப்பான் கிரிக்கெட் அபிவிருத்தி திட்டத்தின் நல்லெண்ணத் தூதுவர் ப்ரியன் காரியபெரும ஆகியோரும் கலந்துகொண்டனர்.