ஜப்பான் கடலில் விழுந்து மூழ்கிய அமெரிக்க போர் விமானம்
அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏவி8பி ஹாரியர் 2 ஜெட் ரகத்தைச் சேர்ந்த போர் விமானமொன்று ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் இன்று காலை விழுந்து விபத்துக்குள்ளானது.
ஒகானாவா தீவில் இருந்து புறப்பட்ட இந்த போர் விமானம் சிறிது நேரத்திலேயே கடலின் கிழக்குப் பகுதியில் விழுந்து விட்டதாக விபத்தை நேரில் பார்த்த ஜப்பான் நாட்டின் கடலோர பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
விபத்தைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் கடலில் விழுந்தவர்களை பத்திரமாகக் காப்பாற்றி கரை சேர்த்தனர்.
ஹெலிகாப்டர் மற்றும் படகுகள் மூலம் விமானத்தை தேடும் பணியில் அப்பகுதியை சேர்ந்த கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/70219.html#sthash.pW7IuPKK.dpuf