புலனாய்வு சேவை நடத்திய இரகசிய ஆய்வும், வெளியாகியுள்ள அதிர்ச்சிகர தகவல்களும்’ என்ற தலைப்பிட்டு jaffna muslim இணையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியொன்றை வெளியிட்டிருந்தது.
கொழும்பு ஊடகமொன்றை மேற்கொள்காட்டியே இந்த செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது.
எனினும் கொழும்பு யேர் வேட்பாளரான ஆசாத் சாலி குறித்த செய்தியை முற்றும் மறுத்தார்.
அப்படி ஒரு ஆய்வு நடக்கவில்லை. அப் படி நடந்திருந்தாலும் அது பகிரங்கப்படுத்தபடாது.
ஐ.தே.க. யினர் இவ்வாறான செய்திகளை பரப்புகின்றனர். இதனை ஊடகங்களும் வெளியிடுகின்றன.
இவை எல்லாவற்றுக்கும் இந்த உள்ளுராட்சி தேர்தல் பதில் சொல்லும். ஜனாதிபதி பல முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள இருக்கிறார் எனவும் ஆசாத் சாலி மேலும் குறிப்பிட்டார்.