ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் மத்திய சபை தீர்மானம் எடுத்துள்ளது.
கட்சியின் மத்திய சபைக் கூட்டம் நேற்றிரவு (26) கட்சியின் தலைவர் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, தற்போதைய நாட்டின் அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதுவரையில் எந்தவொரு கட்சியும் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளரை பெயரிடாதுள்ளது. இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என இதன்போது முன்வைக்கப்பட்ட பிரேரணை, சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.