ஜனாதிபதி விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க தனது நிர்வாகம் அனைத்து இலங்கையர்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை உறுதி செய்யவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று வெளியிட்டுள்ள கடிதத்தில் மனித உரிமை கண்காணிப்பகம் தனது முக்கிய மனித உரிமை கரிசனைகளை வெளியிட்டுள்ளது.
பொருளாதாரத்தை முறையாக கையாளமை, ஊழலிற்கு எதிராக பல மாதங்கள் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து அப்போதைய ஜனாதிபதி பதவி விலகியதை தொடர்ந்து ஜூலை 21 ம் திகதி ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றார்.
பலவருட தவறான நிர்வாகம் மனித உரிமை மீறல்களின் பின்னர் இலங்கை அரசியல் பொருளாதார மனித உரிமை நெருக்கடியின் மத்தியில் சிக்குண்டுள்ளது.
உரிய சமூக பாதுகாப்பு நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம்
நாட்டில் காணப்படும் ஊழலிற்குதீர்வை காண்பதன் மூலம் அரசாங்கம் பொதுமக்களை நெருக்கடிகளில் இருந்து பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.
அதேவேளை கருத்துசுதந்திரம் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளை மதிக்கவேண்டும் ஆயுதப்படையினரின் துஸ்பிரயோகத்தை முடிவிற்கு கொண்டுவரவேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல சவால்களை எதிர்கொண்டுள்ளார், ஆனால் மிக கொடுரமான பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஆர்ப்பாட்ட தலைவர்களை அரசியல் நோக்கத்தின் கீழ் கைதுசெய்வது செயற்பாட்டு குழுக்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் போன்றவை இலங்கை எதிர்கொண்டுள்ள மோசமான பிரச்சினைகளிற்கு தீர்வை காண உதவாது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பின்பற்றினால் சட்டத்தின் ஆட்சியை பின்பற்றினால் நெருக்கடிகளிற்கான அடிப்படைகளிற்கு தீர்வை கண்டால் மாத்திரமே சர்வதேச உதவிகள் பயனுள்ளவையாக காணப்படும் என இலங்கையின் சகாக்கள் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.