கொழும்பு – 3, 5 ஆம் ஒழுங்கை, இலக்கம் 119 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டின் மீது தீ வைத்து அவரது கார் உள்ளிட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், தொலைபேசிகள், காணொளி பதிவு உபகரணங்கள் ஊடாக பதிவு செய்யப்பட்ட காட்சிகள் இருப்பின் அவற்றை தமக்கு வட்ஸ்அப் ஊடாக அனுப்பி வைக்குமாறு பொலிஸார் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
கடந்த 9 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை நால்வர் கைது செயுயப்பட்டுள்ள நிலையில், சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந் நிலையில், பொலிஸ் தலைமையகம் ஊடாக விஷேட கோரிக்கையினை முன் வைத்துள்ள சி.ஐ.டி.யினர், 071 8594950 எனும் தமது வட்ஸ் அப் இலக்கத்துக்கு அவ்வாறான காணொளிகளை அனுப்பி வைக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.