ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (21) பதவி பிரமாணம் செய்ததை தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று (21) கையளித்துள்ளார்.
பதவி விலகல் கடிதம் தொடர்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அதற்கமைய பாராளுமன்ற செயலாளர் நாயகம் அரசியலமைப்பின் 66(இ) உறுப்புரையின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில், உறுப்பாண்மையில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதால் 1988ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான 1981 ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 64(5)ஆம் பிரிவின் கீழ் அறியத்தருகிறேன் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.