அனைத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கடுமையான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வு
அத்துடன் வாக்களிப்பு ஒன்று இடம்பெறும் நாட்களில் அனைத்து நாடாளுமன்ற பிரநிதிகளும் நாடாளுமன்றதத்தில் இருப்பது ஜனாதிபதியால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை அந்தந்த மாவட்டங்களில் பொதுமக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கி அர்ப்பணிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சர்களின் செயல்
நாடாளுமன்றத்தில் கேள்வியொன்று எழுப்பப்படும் சந்தர்ப்பத்திற்கு அதற்கு பொறுப்பான அமைச்சர் பதிலளிக்க இல்லாத காரணத்தினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.