ஜனாதிபதி போதைப்பொருள் ஒழிப்பு செயலணியைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவர் திங்கட்கிழமை வெலிபன்ன பிரதேசத்தில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பதாக வெலிபன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் சட்டவிரோத மதுபானங்களைக் கண்டுபிடிப்பதற்கான பணியில் ஈடுபட்டிருந்த போது பிடிபட்ட கசிப்பு வியாபாரி ஒருவரிடமிருந்து இவர் 6 ஆயிரம் ரூபாவை லஞ்சமாகப் பெற்ற சமயம் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையும்மெய்யுமாகப் பிடிபட்டிருக்கின்றார்.
இதே பிரதேசத்தில் கசிப்பு வியாபாரிகளிடமிருந்து லஞ்சம் வாங்கிய மேல் மாகாண பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரியொருவரும் இலஞ்ச ஊழல்ஆணைக்குழு அதிகாரிகளால் அண்மையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.