உயிர்த்த ஞாயிறு தாக்குதலோடு சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் அவர்களை தூக்கிலிடுவோம் எனக் கூறி தான் இவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேச்சே இல்லை என தேவாலஹிந்த அஜித தேரர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நாட்டை அபிவிருத்தி செய்யும், இவர்கள் வந்தால் இனப்பிரச்சினை இருக்காது, தீவிரவாதம் இருக்காது, இனவாதம் இருக்காது, அனைவருக்கும் சட்டம் பொதுவாக செயற்படுத்தப்படும், குற்றவாளிகளுக்கு இடம் இருக்காது, வெளிநாடுகளை போன்று ஒரு சிறந்த நாடக இலங்கையும் மாறும் என்று நம்பி இவர்கள் கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள்.
இது ஒரு கண்கட்டி வித்தை, இவர்களை ஆட்சிக்கு கொண்டு வராதீர்கள் என நாங்கள் அன்றே சொன்னோம் பல கொலைகளுடன் தொடர்புடையவர்கள், இவர்கள் பல மோசடிகளுடன் தொடர்புடையவர்கள், இவர்கள் பல கொள்ளைகளுக்கு தொடர்புடையவர்கள், இவர்கள் நாட்டு மக்கள் மீது அன்பில்லாதவர்கள், இவர்கள் வெளிநாடுகளில் பல வியாபாரங்களை செய்பவர்கள், ஆகவே இவர்களை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டாம், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என நாம் அன்றே சொன்னோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.