ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம் என ஐக்கியதேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரட்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி தொடர்ந்தும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வெளியிட்டுவந்தால் இவ்வாறு அவர் குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிவரும் என அவர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் இதனைப் பதிவிட்டுள்ள அவர் முக்கிய விடயங்கள் குறித்த விசாரணைகளில் ஜனாதிபதி தலையிட்டமை குறித்து பொறுப்புவாய்ந்த அமைச்சர் என்ற அடிப்படையில் தான் இதுவரை பகிரங்கமாக எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.எனினும் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்தால் யார் எப்போது எவ்வகையில் தலையீடு செய்தார்கள் என்பதை அம்பலப்படுத்தவேண்டியிருக்கும் எனவும் சாகல ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புலனாய்வுத்துறை அதிகாரி நிசாந்த சில்வாவின் இடமாற்றம் குறித்து காவல்துறை மா அதிபர் பாதுகாப்பு செயலாளரிற்கு எழுதியுள்ள கடிதம் ஜனாதிபதிதான் குறித்த உத்தரவை பிறப்பித்தார் என்பதை தெளிவாக காட்டுகின்றது எனவும் இதுவே ஜனாதிபதியின் தலையீடுகளிற்கு தெளிவான உதாரணம் எனவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளர்h.
மேலும் கடந்த மூன்றரைவருட காலப்பகுதியில் ஊழல்கள் இடம்பெற்றிருக்குமானால் தேசிய அரசாங்கத்தின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் அதற்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.