நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் ஜனாதிபதியின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி அதனை இல்லாமல் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு குறைப்பது நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும் எனவும் முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியினால் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் வகையில் பிரேரணையொன்றைக் கொண்டுவரவுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே தீர்மானத்தைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் முன்வைத்து வருகின்றன. அத்துடன், இதற்கு கூட்டு எதிர்க் கட்சியும் தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்பதாகும்.
அரசியல் ரீதியில் நாட்டைப் பலப்படுத்த வேண்டுமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.