தற்போதுள்ள கள நிலவரங்களை வைத்துப் பார்க்கும் போது நாடு முகம்கொடுத்துள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மிகவும் தகுதியான ஒரு தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தான் என இலங்கை பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
எளிய அமைப்பினால் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.
நாட்டில் பொது எதிர்க் கட்சியென்று உள்ளது. இருப்பினும், இதுவரையில் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த எந்தவொரு சட்ட மூலத்தையும் அதனால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இதற்குக் காரணம் அவர்களிடம் 52 பேர் மாத்திரமே உள்ளனர்.
இதனால்தான், நான் தெளிவாகக் கூறுகின்றேன். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்துச் செயற்பட மிகவும் தகுதியானவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆவார். அவரை விட்டால் வேறு யாராளும் இந்த நாட்டைக் காப்பாற்ற முடியாது. இதனை நான் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.