ஜனாதிபதியின் யாழ்ப்பான பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயோதிபப் பெண் ஒருவர் வீதியில் மயங்கி விழுந்துள்ளார்.
ஜனாதிபதியின்பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் போராட்டமொன்று இன்றையதினம் காலை பத்திரிசியார் கல்லூரி சந்திப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆய்வுகூடத் திறப்பு விழாவிற்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.. இந்த நிலையில் புனித பத்திரிசியார் கல்லூரி நோக்கிச் செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையிலே நீண்ட நேரமாக போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வயோதிபத் பெண் மயங்கி விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம் பத்திரிசியார் கல்லூரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக மூன்று பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.