உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை 2017 ஜனவரி மாதம் 20 ஆம் 31 ஆம் திகதிகளுக்கு இடையில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
எனினும், ஞாயிறு அல்லது பொது விடுமுறை நாட்களில் தேர்தல் நடத்தப்பட மாட்டாது.
இதனிடையே, டிசம்பர் 11 ஆம் 20 ஆம் திகதிகளில் வேட்புமனுக்கள் கோரப்படும் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.