எதிர்வரும் ஜனவரி மாதம் வற் வரி 18% ஆக உயர்த்தப்பட்டதன் மூலம் வாகன உதிரிபாகங்களின் விலை ரூ.300-600 வரை உயரும் என வாகன உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் அனைத்து நுகர்வோரும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த மாதத்தை விட சில உதிரி பாகங்களின் விலை 30-40 ரூபாய் வரை அதிகரித்துள்ள நிலையில் இனிவரும் சடுதியான விலை அதிகரிப்பு வாகன உரிமையாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.
வாகன உதிரிபாகங்களின் அதிக விலை மற்றும் அதிக ஆயுள் சுமை காரணமாக, பல வாகனங்கள் சரியான நேரத்தில் பழுதுபார்க்கப்படுவதில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வாகனங்கள் பாதுகப்பற்ற நிலையில் உள்ளதாகவும் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.