‘இந்தியா: ஜனநாயகத்தின் தாய்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் வேரூன்றியிருந்த ஜனநாயக நெறிமுறைகளை வெளிப்படுத்தும் முயற்சி இது என்று கூறினார்.
அர்த்தசாஸ்திரத்தின் ஜனநாயக சிந்தனைகள், பழங்கால சமஸ்கிருத நூல்களில் இருந்து ஆளும் கொள்கைகள், ‘கோயில் ஸ்தாபனங்களின்’ ஜனநாயகம், மற்றும் ஹரியானாவின் பஞ்சாயத்துகள் மற்றும் ஜனநாயக மரபுகள் – இவை இந்திய வரலாற்று ஆராய்ச்சி பேரவையின் புதிய புத்தகத்தில் உள்ள தலைப்புகளாகும்.
‘இந்தியாவின் நாகரிக நெறிமுறைகள் ஜனநாயகத்தின் அசல் ஆதாரங்களில் ஒன்றாகும். இது மேற்கத்திய நாடுகளின் கதைகளுக்கு மாறாக உள்ளது. ஜனநாயகத்தின் வேர்கள் 4ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் காணப்படுகின்றன. தஞ்சாவூரின் கல்வெட்டுகள் அதற்கு ஒரு உயிருள்ள சாட்சியமாக உள்ளதாக கூறினார்.
தஞ்சாவூரை மையமாகக் கொண்ட சோழப் பேரரசு தீபகற்பத்தின் பரந்த பகுதிகளை ஆண்ட 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னைக்கு அருகிலுள்ள உத்திரமேரூர் என்ற கிராமத்தின் கல்வெட்டுகளை அமைச்சர் குறிப்பிடுகிறார். கிமு 7 ஆம் நூற்றாண்டில் கங்கை சமவெளியில் ஒரு ராஜ்யத்தைக் கொண்டிருந்த லிச்சவிகாக்கள், ஒரு சட்டமன்றத்தால் நிர்வகிக்கப்படும் குடியரசை உருவாக்கினர். நவீனகால ஒடிசாவில் உள்ள கலிங்கம், கிமு 2ஆம் நூற்றாண்டு வரை, ஜனநாயக நாடாகக் கருதப்பட்டது.
தனது நாகரீகத் திறனைப் பற்றி பெருமை கொள்ளாத ஒரு சமூகம் பெரிதாகச் சிந்தித்து சாதிக்க முடியாது. இந்த புத்தகம் இந்தியாவின் ஜனநாயக மரபு பற்றிய ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்கும். மறுப்புறம் எதிர்கால சந்ததியினரை நமது காலத்தால் அழியாத நெறிமுறைகளைப் போற்ற ஊக்குவிக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.